அன்னை தெரஸாவுக்கு புனிதர் பட்டம்

mother_teresa 01
அன்னை தெரசாவுக்கு இன்று வாடிகன் நகரில் புனிதர் பட்டம் வழங்கப்பட்டது. போப் பிரான் சிஸ் முறைப்படி அதற்கான அறிவிப்பை வெளியிட்டார். இதை முன்னிட்டு ரோம் நகரில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன.

இந்த விழாவில் 13 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், உலகம் முழுவதிலிருந்தும் பேராயர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்தியாவின் சார்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவிற்காக லட்சக்கணக்கானோர் வாடிகனில் கூடியதால் விழாக்கோலம் பூண்டது, மேலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தது.

இந்தியாவில், கொல்கத்தா நகரில் மதர் தெரசா இல்லத்தில் சிறப்பு பிரார்த்தனைக்காக மக்கள் கூடினர். கொல்கத்தாவில் உள்ள மிஷனரிஸ் ஆப் சேரிட்டி மற்றும் பல இடங்களில் சிறப்பு பிரார்த்தனைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அல்பேனியாவில் கடந்த 1910-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 26-ம் தேதி பிறந்தவர் அன்னை தெரசா. இவரது இயற்பெயர் ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ. இளம் வயதிலேயே கத்தோலிக்க மதத் தில் துறவறம் மேற்கொண்டார். பின்னர் இந்தியாவின் கொல்கத்தா நகருக்கு சேவை செய்ய வந்தார். இங்கு ‘மிஷனரிஸ் ஆப் சேரிட்டி’ என்ற கத்தோலிக்க சபையை நிறுவினார். பின்னர் இந்தியாவிலேயே நிரந்தரமாக தங்கினார்.mother_teresa

நோபல், பாரத ரத்னா

வாழ்நாள் முழுவதும் ஏழைகள், தொழு நோயாளிகள், காசநோயால் பாதிக்கப்பட்ட வர்களுக்காக சேவை செய்தார். இவரது சேவையை கவுரவிக்கும் வகையில் கடந்த 1979-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங் கப்பட்டது. அதேபோல் இந்தியா வின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதும் கடந்த 1980-ம் ஆண்டு அன்னை தெரசாவுக்கு வழங்கப்பட்டது. கடந்த 1997-ம் ஆண்டு செப்டம்பர் 5-ம் தேதி அன்னை தெரசா காலமானார்.

அவரது மறைவுக்கு பிறகு அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டும் என்று பல தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். அதை வாடிகன் தொடர்ந்து பரிசீலித்து வந்தது. ஒருவருக்கு புனிதர் பட்டம் வழங்க வேண்டுமானால், அவர் இறந்த பின்னர் 2 அற்புதங்களை நிகழ்த்தி காட்டி இருக்க வேண்டும் என்று கத்தோலிக்க மதத்தில் கூறப்பட்டுள்ளது. அதன்படி, அன்னை தெரசாவை தொடர்ந்து பிரார்த்தனை செய்து வந்ததால், தங்கள் நோய் முற்றிலும் குணமடைந்ததாக 2 பேர் கூறினர். அவர்களுடைய தகவல்களை ஆராய்ந்த பின் அன்னை தெரசாவுக்கு புனிதர் பட்டம் வழங்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் வாடிகனில் போப் பிரான்சிஸ் அறிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com