சற்று முன்
Home / செய்திகள் / அன்னம் சின்னத்தில் சஜித் போட்டி !!

அன்னம் சின்னத்தில் சஜித் போட்டி !!

“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிறேமதாச அன்னம் சின்னத்திலேயே போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இன்று பிற்பகல் கூடிய ஐதேக செயற்குழு சஜித் பிறேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்தது. அதனையடுத்தே சின்னம் குறித்து முடிவெடிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

2015 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளராக களமிறக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேன அன்னம் சின்னத்திலேயே போட்டியிட்டு வெற்றி பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தார். முன்னதாக நடைபெற்ற தேர்தலிலும் ஐக்கிய தேசிய முன்னணியின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகா அன்னம் சின்னத்திலேயே மகிந்த ராஜபக்சவை எதிர்த்துப் போட்டியிட்டிருந்தார். எனினும் குறித்த தேர்தலில் சரத் பொன்சேகா வெற்றிபெற்றிருக்கவில்லை.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com