சற்று முன்
Home / செய்திகள் / அனுராதபுரத்தில் நாளை காலை ஜனாதிபதியாக பதவியேற்கிறார் கோட்டா

அனுராதபுரத்தில் நாளை காலை ஜனாதிபதியாக பதவியேற்கிறார் கோட்டா

முன்னாள் ஜனாதிபதியும், எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் பிறந்தநாளான நாளை இலங்கையின் 7வது ஜனாதிபதியாக கோட்டாபாய ராஜபக்ச பதவியேற்கவுள்ளார்.

மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சவின் பிறந்த நாளான நாளைக் காலை 7 மணிக்கு கோத்தாபய ராஜபக்ச ஜனாதிபதியாகப் பதவியேற்கிறார். அநுராதரபுரம் ருவான்வெளி மகா சபா முன்னிலையில் அவர் பதவியேற்கவுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச வெற்றியீட்டியதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்று மாலை உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

இதன்போது பிற்போடப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்துமாறும் தேர்தல் ஆணையாளர் இங்கு வேண்டுகோள் விடுத்தார்.

இங்கு கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச , வாக்களித்த மக்களுக்கும் புதிய ஜனாதிபதிக்கும் நன்றியை தெரிவித்தார். நாட்டின் ஜனநாயக மாண்புகளை மதித்து மக்கள் நலன் பேணுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கோட்டாபய ராஜபக்ச இங்கு கருத்து கருத்து வெளியிடுகையில் தமது பிரசாரத்தில் யார் மீதும் சேறு பூசும் வகையில் நடந்துகொள்ளவில்லையென குறிப்பிட்டார்.

வாக்களித்த மக்களுக்கும் வாக்களிக்காத மக்களுக்கும் இன மத பாகுபாடின்றி சேவையாற்ற தாம் உறுதிபூண்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com