அநுருத்த ரத்வத்தவின் மகனுக்கு விளக்கமறியல்

420960883untitled-1காலஞ் சென்ற முன்னாள் அமைச்சர் அநுருத்த ரத்வத்தவின் மகனும், பாராளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் சகோதரருமான, சானுக ரத்வத்த உள்ளிட்ட மேலும் நால்வருக்கு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

ரூபா 1,200 கோடி பணத்தை மோசடியாக பெற்றுக் கொண்டதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் குறித்த ஐவரும் இன்று (14) பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்ட்ரஸ்ட் செகியுரிட்டி நிறுவனத்தின், நிறைவேற்றுப் பணிப்பாளராக இருந்த வேளையில், அந்நிறுவனத்தின் ஊடாக குறித்த மோசடியை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஜனவரி மாதம், குறித்த நிறுவனம் அரசாங்கத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, மீள்சீரமைக்கப்படுவதற்காக, தேசிய சேமிப்பு வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds