அத்துமீறிய ஆசிரியர் விளக்கமறியலில் !

மாணவிகளுடன் அத்துமீறி நடந்து கொண்ட ஆசிரியர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
யாழ்ப்பாணம், அனலைதீவில் உள்ள பாடசாலை ஒன்றின் ஆசிரியர் ஒருவர் கடந்த பெப்ரவரி 3 ஆம் திகதி 4 மாணவிகளுடன் அத்துமீறி நடந்து கொண்ட வீடியோ ஒன்று அண்மையில் இணையங்களில் வெளியாகியிருந்தது.

இதனையடுத்து அந்தப் பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. பாடசாலையின் பழைய மாணவர்களும், பொதுமக்களும் பாடசாலையைச் சுற்றி வளைத்தனர். கொடும்பாவி எரிக்கப்பட்டது. ஆசிரியர்கள் தாக்கப்படும் அபாயமும் எழுந்தது. எனினும் பின்னர் ஆசிரியர்கள் பொலிஸாரின் உதவியுடன் பத்திரமாக வெளியேறினர். குற்றம் சுமத்தப்பட்ட ஆசிரியர் பொலிஸிடம் ஒப்படைக்கப்பட்டார். இதனையடுத்து குறித்த ஆசிரியர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, மே 17 வரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால் உத்தரவிட்டார்.
இந்தநிலையில் குறித்த சம்பவத்தால் பாடசாலைச் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்தன. எனினும் இன்று காலை கல்வித்திணைக்களத்தினர், வடமாகாணசபை உறுப்பினர்கள் நேரடியாக பாடசாலைக்கு சென்று நடத்திய கலந்துரையாடலில், பழைய மாணவர்கள் தமது செயற்பாடுகளுக்கு மன்னிப்புக் கோரினர். இதனையடுத்து பாடசாலை தொடர்ந்து இயங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதேவேளை- குறித்த ஆசிரியர் தம்மோடு பகிடியாகவே நடந்து கொண்டதையே அத்துமீறல் என்று தவறாகச் சொல்வதாக இரு மாணவிகளும், அப்படி ஒரு சம்பவம் நடக்கவேயில்லை என ஏனைய இரு மாணவிகளும் அதிபரிடம் கடிதம் கொடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com