அத்தியாவசிய பொருட்களுக்கு விலை நிர்ணயம்

priceவற்வரி நீக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களின் நிர்ணய விலையினை அரசாங்கம் அறிவித்துள்ளது.

சிவப்பு பருப்பு ஒரு கிலோ 160 ரூபா , கடலை ஒரு கிலோ 260 ரூபா, இறக்குமதி செய்யப்பட்ட பாசிப்பயறு ஒரு கிலோ 220 எனவும் மேலும் ரின்மீன் 140 ரூபா (சதொச, லக்சதொசகளில் 125ரூபா), வெள்ளைச்சீனி ஒரு கிலோ 95 ரூபா , கோதுமை மா ஒரு கிலோ 87 ரூபா , இறக்குமதி செய்யப்பட்ட பால்மா ஒரு கிலோ 810 ரூபா, உள்நாட்டு பால்மா ஒரு கிலோ 735 ரூபா என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரி.எம்.கே.பி.தென்னக்கோன் குறிப்பிட்டார்.
மேலும் தோலுடன் கோழி இறைச்சி 410 ரூபா , தோல் இல்லாமல் கோழி இறைச்;சி 495 ரூபா , இறக்குமதி செய்யப்பட்ட கிழங்கு 120 ரூபா , இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் ஒரு கிலோ ரூபா 78 , செத்தல் மிளகாய் ஒரு கிலோ 385 ரூபா என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com