அதிகாலை துணிகர கொள்ளை – 14 பவுண் நகை அபேஸ் – இளவாலையில் சம்பவம்

இளவாலை வடக்கு பகுதியில் நேற்று (13) அதிகாலை ஒரு மணியளவில் துணிகர கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இளவாலை பொலிஸார் கூறினர்.

அதிகாலை வீட்டின் முன்கதவினை உடைத்து உள்ளே சென்ற கொள்ளையர்கள் 1 ½ பவுண் சங்கிலி 1, 2சோடி தோடு, ½ பவுண் மோதிரம் 4 மற்றும் 9 பவுண் தாலிக்கொடி உட்பட 50ஆயிரம் ரூபா பணத்தினையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கொள்ளையடிக்கப்பட்ட நகையினை பெறுமதி 5இலட்சத்து 60ஆயிரம் ரூபா என கணக்கிடப்பட்டுள்ளதுடன், பணத்துடன் சேர்த்து 6இலட்சத்து 10ஆயிரம் ரூபா சொத்து அபகரிக்கப்பட்டுள்ளது. கொள்ளையர்களின் தாக்குதலில் பாலசுப்பிரமணியம் தர்மபாலன் வயது(66) என்பவர் காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் கூறினர்.

இத் துணிகர சம்பவம் இளவாலை பகுதியில் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் வழக்கு பதிவு செய்துள்ள குற்றத்தடுப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com