சற்று முன்

அதிகாரப் போட்டியின் உச்சம் – கிளிநொச்சி பாடசாலை ஒன்றிற்கு மூன்று அதிபர்கள்…!

அரசியல் அதிகாரப் போட்டியின் உச்ச வெளிப்பாடு காரணமாக வடமாகாண கல்வி அமைச்சு கிளிநொச்சியிலுள்ள பாடசாலையொன்றிற்கு மூன்று அதிபர்களை நியமித்து சாதனைபுரிந்துள்ளது.

குறித்த பாடசாலைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஒரு அதிபரையும் கல்வி அமைச்சர் கருகுலராஜா இன்னொரு அதிபரையும் நியமித்துள்ளார்.
இந்நிலையில் மத்திய இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணனோ மற்றொரு அதிபரை நியமிக்க உத்தரவிட வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் அதனையும் நிறைவேற்றியுள்ளார். இதனால் தற்போது குறித்த பாடசாலையானது மூன்று அதிபர்களுடன் செய்வதறியாது திணறிவருகின்றது.

ஏற்கனவே அதிபர் பரீட்சையில் சித்தியெய்தியவர்களிற்கு நியமனம் வழங்கவென பாடசாலைகள் தோறும் இரண்டு, மூன்றென பிரதி அதிபர்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்தனர். இவ்விவகாரமும் சர்ச்சைகளினை தோற்றுவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com