அணுஆயுதம் சுமந்து கண்டம் தாண்டி தாக்கும் அக்னி 5 – வெற்றிகரமாக பரிசோதித்தது இந்தியா

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட, அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லக்கூடிய, நீண்ட தூரம் பாய்ந்து சென்று இலக்குகளைத் தாக்கும் அக்னி – 5 ஏவுகணை வெற்றிகரமாகப் பரிசோதித்துப் பார்க்கப்பட்டது.

ஒடிஸா மாநிலம் வீலர் தீவிலிருந்து இன்று (திங்கட்கிழமை) காலை 11.18 மணிக்கு இந்த சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

1.5 டன்கள் எடை கொண்ட அணு ஆயுதத்தை சுமந்து சென்று சுமார் 5000 கி.மீ, தூரத்துக்கு அப்பால் உள்ள இலக்குகளை துல்லியமாகத் தாக்கும் வல்லமை படைத்தவை அக்னி ஏவுகணைகள். இந்த வரிசையில் அக்னி – 5 ஏவுகணை பரிசோதனை நான்காவது வெற்றியாகும். இதற்கு முந்தைய பரிசோதனைகள் ஏப்ரல் 19, 2012, செப்டம்பர் 15, 2013 மற்றும் ஜனவரி 31, 2015 ஆகிய தேதிகளில் நிகழ்த்தப்பட்டன.

அக்னி – 5 ஏவுகணை உயரிய தொழில்நுட்பங்களோடு, மற்ற ஏவுகணைகளைக்காட்டிலும் மிகவும் முன்னேறிய நிலையில் அதிநவீன வழிதட முறை (நேவிகேஷன் சிஸ்டம்) மற்றும் என்ஜின்களோடு தயாரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com