அட்டன் நகரில் கடையொன்றில் தீ ஏற்படவிருந்து பேராபத்து பிரதேசவாசிகளின் உதவியால் தடுப்பு

அட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டன் நகரில் டன்பார் வீதியில் அமைந்துள்ள இரும்பு பொருட்கள் விற்பனை கடை ஒன்றில் 13.10.2016 அன்று இரவு சுமார் 10.30 மணியளவில் ஏற்பட்ட தீயினால் கடை முற்றாக சேதமடைந்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

அட்டன் பொலிஸார், பிரதேசவாசிகள் மற்றும் அட்டன் டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் இணைந்து இரண்டு மணித்தியால முயற்சியின் பின்னே தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்தீயினால் எவருக்கும் பாதிப்படாதா போதிலும் உடனடியாக செயற்ப்பட்டு தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்ததனால் ஏனைய கடைகளுக்கு தீ பரவாமல் ஏற்படவிருந்த பேராபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.

இக்கடைக்கு அருகாமையில் உள்ள குதிரை பந்தைய கடையொன்றில் மலசல கூடத்திற்கு சென்ற ஒருவர் மலசல கூடத்தின் சூட்டினை உணர்ந்து சுற்றிப்பார்த்துள்ளார். அதனை தொடர்ந்து பக்கத்தில் உள்ள கடையிலிருந்து புகை வருவதனை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்ததனையடுத்து தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இத்தீயிக்கான காரணம் மற்றும் சேதவிபரம் உறுதி செய்யப்படவில்லை என்றும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.dsc02875 img_2417 vlcsnap-2016-10-14-07h17m37s49 vlcsnap-2016-10-14-07h18m01s32

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com