அட்டன் – டிக்கோயா வனராஜா மேற்பிரிவில் தோட்ட குடியிருப்பில் தீ

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட அட்டன் – டிக்கோயா வனராஜா மேற்பிரிவில் தோட்ட குடியிருப்பில் 27.02.2016 அன்று காலை 10 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் வீட்டு பகுதியில் ஒரு வீட்டில் தீ பரவியுள்ளது.

இதனால் அவ்வீட்டில் உபகரணங்கள் அனைத்தும் எரிந்து நாசமாகியுள்ள நிலையில் அயலில் உள்ளவர்களால் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேவேளை இது தொடர்பாக அட்டன் பொலிஸ் நிலையத்திற்கு பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பின் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் தீ பரவலுக்கான காரணங்களை கண்டறிய விசாரணகளை மேலதிக மேற்கொண்டு வருகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com