அட்டன் குடகாம குப்பைமேட்டில் குழி தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் வீதியை மறித்து ஆர்ப்பாட்டம்

அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் குடாகம பகுதியில் குப்பைமேட்டில் கழிவகற்றும் குழி ஒன்று தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பிரதேசவாசிகள் அட்டன் நுவரெலியா பிரதான வீதியினை மறித்து 19.02.2017 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

இவ்வார்ப்பாட்டம் காரணமாக அட்டன் நுவரெலியா பிரதான வீதியின் பொது போக்குவரத்து சுமார் ஒரு மணித்தியாலயத்திற்கு மேலாக முற்றாக செயழிழந்தன.

அட்டன் டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பகுதியில் சேர்க்கப்படும் கழிவுகள் அட்டன் குடாகம பகுதியிலேயே விடுவிக்கப்படுகின்றன.
இதனால் பல்வேறு சூழல் சீர்கேடுகள் ஏற்பட்டுள்ளதாகவும், பிரதேசம் முழுவதும் துர்நாற்றம் வீசுவதனாலும் பல தடவைகள் ஊடகங்கள் சுட்டிக்காட்டின.

அத்தோடு இப்பிரதேச மக்களும் இப்பிரச்சினை தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இந்நிலையிலேயே மற்றுமொரு குழி தோண்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து இவ்விடத்திற்கு விரைந்த அட்டன் பொலிஸார் அட்டன் டிக்கோயா நகரசபையின் செயலாளருடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொண்டு இந்த குப்பை பிரச்சினை தொடர்பாக கலந்துரையாடினார்.

இதன் பிறகு 20.02.2017 அன்றைய தினம் ஆர்ப்பாட்டகார்கள், பொலிஸார் மற்றும் செயலாளர் ஆகியோர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகார்கள் கலைந்து சென்றனர்.

இதேவேளை மகாவலி ஆற்றிற்கு நீர்வழங்கும் கிளை ஆறுகளில் ஒன்றான குடாஓயா ஆற்றிற்கு இக் குப்பைகள் கலப்பதனால் மகாவலி ஆற்றின் நீர் அசுத்தமடைந்துள்ளது.

இதனால் மகாவலி ஆற்றை பயன்படுத்தும் மக்கள் பல்வேறு அசௌகரியகங்களுக்கு முகங்கொடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com