அடுத்த சி.எம். என விஜயைப் புகழந்து வாங்கிக் கட்டிய பார்த்தீபன்

சமீபத்தில் நடந்த மெர்சல் இசைவெளியீட்டு விழாவில், விஜய்யை புகழ்ந்து பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பார்த்திபன். அப்படி என்ன பேசினார்?
“ஓ.பி.எஸ்ஸும், ஈ.பி.எஸ்ஸும் இணைஞ்சா என்னாகும்னு தெரியாது. ஆனா விஜய்யும் அவரது ரசிகர்களும் இணைந்தால் விஜய் தான் இனி சி.எம். என்றார். இதனைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகமடைய, கொஞ்சம் இடைவெளிவிட்டு சி.எம் னா கலெக்‌ஷன் மன்னன்… வேறொன்னும் இல்ல” என விஜய்யை உயர்த்திப் பேசினார்.
அவருடைய இந்த பேச்சைக்கேட்ட அஜித் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா? கைதட்டல்களுக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா? கொடுத்த காசுக்கு மேல கூவீட்டிங்க என்று பல மீம்ஸ்களை போட்டு பார்த்திபனை கலாய்க்க ஆரம்பித்துவிட்டனர்.
இதனைப் பார்த்த பார்த்திபன் அஜித் ரசிகர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது டுவிட்டர் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அந்த பதிவில், “காசுக்கு மாரடிக்காத Mass-ஆன பேச்சுக்கு மாசு நிறைந்த ஏச்சுக்கு ஆளானது இதுவே முதன்முறை! வாயார/மனதார வாழ்த்துவது என் மேடை நாகரிகம். அவர் அழைத்தாலும் தலை நிமிர இப்படி சொல்வேன். “வேகத்தை விட ‘விவேகம்’ பெருசு-ஆனால் விவேகத்தை விட அஜித்தே பெருசு!”
நான் கலைஞர்கள் அனைவருக்கும் நண்பன். ஆனால் சினிமாவுக்கு மட்டுமே ரசிகன். ‘ஆளப்போறான்(?) சிறந்த(?)மனிதன்(?) வாழப்போறான் விவசாயி’-அதுவே நம்பிக்கை நிறைந்த என் பேச்சின் மெரஸலான மெசேஜ்.” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com