அடுத்த குறி வாஷிங்டன் – ஐ.எஸ்.ஐ.எஸ் மிரட்டல் வீடியோ!

சிரியாவில் தங்களுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் அனைத்து நாடுகளும் கடுமையான விளைவை சந்திக்கும் என மிரட்டல் விடுத்துள்ள ஐ.எஸ். தீவிரவாதிகள், விரைவில் அமெரிக்காவின் வாஷிங்டனில் தாக்குதல் நடத்தப்படும் என்ற மிரட்டல் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு எதிராக அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் சிரியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐ.எஸ். தீவிரவாதிகள் சில நாட்களுக்கு முன்னர் ரஷ்யாவின் விமானத்தை சுட்டு வீழ்த்தினர்.

மேலும் பிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.


இந்நிலையில் தங்களின் அடுத்த குறி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரம் என்று தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக, அந்த அமைப்பினர் வெளியிட்டுள்ள வீடியோவில் தோன்றும் நபர் ஒருவர், பிரான்ஸ் நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதல் போன்று விரைவில் அமெரிக்காவின் வாஷிங்டனில் தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஐ.எஸ். அமைப்பினருக்கு எதிராக சிரியாவில் போரில் ஈடுபட்டு வரும் அனைத்து நாடுகளுக்கும் இதே நிலைதான் ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

பிரான்ஸ் நாட்டில் தாக்குதல் நடத்திய சில தினங்களில் ஐ.எஸ். அமைப்பினர் வெளியிட்டுள்ள இந்த வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds