சற்று முன்
Home / செய்திகள் / அடுத்த ஆட்டத்திற்கு தயாராகும் சஜித் – ஐ.தே.கவிலிருந்து வெளியேறுகிறார் ?

அடுத்த ஆட்டத்திற்கு தயாராகும் சஜித் – ஐ.தே.கவிலிருந்து வெளியேறுகிறார் ?

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட சஜித் பிரேமதாஸ தலைமையில் புதிய அரசியல் கட்சி ஒன்றை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

சஜித் பிரேமதாசவின் தேர்தல் தோல்விக்கு ரணில் தரப்பினரே காரணம் எனக் கூறப்படுகின்றது. ஜனாதிபதித் சுமார் 270 பொதுக்கூட்டங்களில் சஜித் பிரேமதாச மேடையேறியிருக்கிறார். அவருடன் இணைந்து மூன்றில் ஒரு பங்கு அளவிலான கூட்டத்தில் கூட ரணில் விக்கிரமசிங்க மேடையேறவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

சஜித் ஜனாதிபதியானால் தனது அரசியல் எதிர்காலம் முடிவடைந்துவிடும் என கணித்தே ரணில் சஜித்தை ஜனாதிபதி வேட்பாளராக்குவதற்கோ – பின்னர் சஜித்திற்காக பிரச்சாரம் செய்வதற்கோ முனைப்புக் காட்டவில்லை எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க நீங்கவில்லை என்றால், புதிய கூட்டணியுடன் பொதுத் தேர்தலில் களமிறங்க சஜித் தரப்பினர் தீர்மானித்துள்ளனர்.

இதன் காரணமாகவே சஜித் பிரேமதாஸவுக்கு நெருக்கமான அமைச்சர்கள் தமது அமைச்சுப் பதவியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பொதுத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான கூட்டணியை விடவும் அதிக ஆசனங்களை வென்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை சஜித்திற்கு பெற்றுக் கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்மூலம் ஐக்கிய தேசிய கட்சியின் அதிகாரத்தை பெறுவதே அந்த குழுவின் நோக்கம் என குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, புதிய ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவை வாழ்த்திய சஜித் பிரேமதாஸ, தான் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகவும், மீண்டும் மக்கள் சேவைக்கு வருவதாகவும் குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

இனப்படுகொலையில் இன்னெமொரு பரிமாணமே ‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ செயலணி

தமிழர்களைப் பொறுத்த வரையிலே அவர்களுக்கு எதிராக 1948ம் ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இனப்படுகொலையின் இன்னுமொரு பரிமாணமே ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com