அஞ்சல் மூல வாக்காளர்கள் கவனத்துக்கு !

எதிர்வரும் 11ம் திகதி இடம்பெறவிருந்த வடமாகாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை தவிர்ந்த நாட்டின் மற்றைய பிரதேசங்களின் உள்ளூராட்சி தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்குபதிவுக்கு தகுதி பெற்ற வாக்காளர்களின் அஞ்சல் வாக்களர் அட்டைகள் எதிர்வரும் 13ம் திகதி வௌியிடப்படும் என தேர்தல்கள் ஆணையம் தெரிவித்துள்ளது.

அறிக்கையொன்றை வௌியிட்டு அந்த ஆணையம் இதனை தெரிவித்துள்ளது.

அஞ்சல் வாக்களர் அட்டைகளுடன் வாக்காளர்களுக்கு அனுப்ப தீர்மானிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் பெயர் பட்டியல் அச்சிடலில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக இவ்வாறு அஞ்சல் வாக்குப்பதிவு எதிர்வரும் 13ம் திகதிக்கு பிற்போடப்பட்டதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com