அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலயத்திற்கு 1.5மில்லியன் ரூபா பெறுமதியான உதவி

டி.எஸ்.சேனாநாயக்க கல்லூரியின் பழைய மாணவர்களினால் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு அச்சுவேலி சரஸ்வதி வித்தியாலய சமூகத்திற்கு 1.5மில்லியன் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள்  வழங்கி வைக்கப்பட்டது.
52வது படைப்பிரிவின் கட்ளை அதிகாரி மேஜர் ஜெனரல் அருண வன்னியாராச்சி அவர்களின் நேரடி செயற்றிட்டத்தின் கீழ் குறித்த பாடசாலை தெரிவு செய்யப்பட்டிருந்தது.
கல்லூரியின் முதல்வர் அருள்ஜோதி தலமையில் இடம்பெற்றிருந்த இந் நிகழ்விற்கு டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் அதிபர் ஆர்.எம்.எம.ரத்நாயக்க மற்றும் அவரது பாரியார், அவர்களுடன் இணைந்து பழையமாணவர் சங்கத்தினர் கலந்து கொண்டு பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.
வறுமைக்கோட்டு உட்பட்ட மாணவர்கள் 10பேருக்கு துவிச்சக்கரவண்டிகளும், பாடசாலை அலுவலகத்திற்கும் மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கென 5கணணி தொகுதிகளும், ஒரு தொகுதி விளையாட்டு உபகரணங்கள், சங்கீத உபகரணங்கள், பாடசாலை உகரணங்கள், 10 மின்விசிறி தொகுதிகள், ஆசிரியர்களுக்கு சமையல் உபகரணங்கள், அத்துடன் பாடசாலையினை அழகுபடுத்துவதற்கென 8லீற்றர் பெயின் வாளிகள் உட்பட 1.5 மில்லின் ரூபா பெறுமதியான பொருட்களை டி.எஸ்.சேனநாயக்க கல்லூரியின் முதல்வர் மற்றும் பழைய மாணவர்களினால் பாடசாலை நிர்வாகத்திடம் கையளிக்கப்பட்டது. இவ் விழாவிற்கு சிறுப்பு விருந்தினராக யாழ்மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி, பாடசாலை நலன்விரும்பிகள், பழையமாணவர்கள் , பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.
இறுதியில் பாடசாலை மாணவர்களின் கலைகலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்ததுடன், பாடசாலை முதல்வரினால் நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com