அச்சுவேலியில் 04 ஆம் மாடி !!

கொழும்பிலிருந்து வருகைதந்த புலானாய்வுப் பிரிவினர் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வைத்து சுயாதீன ஊடகவியலாளர் தம்பித்துரை பிரதீபனிடம் இன்று 3 மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.

மாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கடந்த 5ம் மாதம் 8ம் திகதி யாழ்.ஊடக அமையத்தில் பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தியிருந்தார். முள்ளிவாய்க்கால் தினத்தன்று ஜனாதிபதி முல்லைத்தீவுக்கு வர இருந்தார். ஜனாதிபதி அத்தினத்தில் முல்லைத்தீவுக்கு வந்தால் அவருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டுவோம் என ஊடக சந்திப்பில் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டிருந்தார்.

அதன் காணொளிகள் தெரண தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டன. அவரது பத்திரிகையாளர் சந்திப்பு குறித்தே குற்ற புலனாய்வு துறையினர் விசாரணை நடத்தியிருக்கின்றனர். இந்த விடயம் தொடர்பாக விசாரிப்பதற்காக கடந்த 10ம் திக தி தம்பித்துரை பிரதீபனை கொழும்புக்கு வருமாறு குற்றபுலனாய்வு துறையினர் அழைப்பு விடுத்திருந்தனர். எனினும் குறித்த ஊடகவியலாளர் விபத்தில் சிக்கி நடமாட இயலாத நிலையில் இருந்ததால் 10ம் திகதி விசாரணைக்கு சமூகமளிக்கவில்லை. இதனையடுத்து கொழும்பில் இருந்து இன்று யாழ். வந்த குற்ற புலனாய்வு துறையின் குழு ஒன்று யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் வைத்து இந்த விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. மேலும் இந்த விசாரணைகளில் மேற்படி ஊடகவியலாளரிடம் விளக்கம் கேட்கப்பட்டு சிங்கள மொழியிலேயே அவருடைய விளக்கம் எழுதப்பட்டிருந்தமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com