அச்சுவேலியில் விபத்து முதியவர் படுகாயம்

 

பருத்தித்துறை – யாழ் வீதி புத்தூர் அரச வைப்பகம் ஒன்றிற்கு அருகில் விபத்து ஒன்று இன்று காலை இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் புத்தூர் கிழக்கை சேர்ந்த பண்டா கிட்னர் (வயது 75) என்ற முதியவரே ஆபத்தான நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் . இவ் விபத்து இடம்பெற்ற பகுதிக்கு அண்மையில் உள்ள உணவகம் ஒன்றில் உணவருந்தி விட்டு முதியவர் வீதியை கடந்துள்ளார். அதன்போது எதிரே வந்த கயஸ் வாகனம் மோதியே இவ் விபத்து இடம்பெற்றுள்ளது. நீண்ட நேரம் உயிருக்கு போராடிய முதியவரை அங்கிருந்தவர்கள் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நீண்ட நேரத்தின் பின்னர் ஒரு சிலர் ஆட்டோ ஒன்றை மறித்து குறித்த முதியவர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். இவ்விபத்து குறித்து அச்சுவேலி பொலிசார் விசாரணைகளை முன்னெடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com