சற்று முன்
Home / செய்திகள் / அங்கஜன், விஜயகலா, டக்ளஸ் எம்.பிக்கள் வரவுசெலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பார்களா ?

அங்கஜன், விஜயகலா, டக்ளஸ் எம்.பிக்கள் வரவுசெலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பார்களா ?

தாங்கள் தமிழ் மக்களால் தேர்வுசெய்யப்பட்டவர்கள் என்றும் தாங்களும் தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்றும் கூறுகின்ற பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்த உள்ளிட்ட வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் நடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிப்போம் எனும் நிபந்தனையை அரசிற்கு முன்வைப்பார்களா என கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் வரவுசெலவுத்திட்டத்தை எதிர்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்துவது எனவும் அதற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்கள் போராட்டங்களையும் முன்னெடுக்கப்போவதாக சிவில் அமைப்புக்கள் மற்றும் முதலமைச்சர் உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகளுடன் இன்று முதலமைச்சர் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதன்போதே மேற்கண்டவாறு குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி ஊடகங்கள் வாயிலாக கேள்வி முன்வைக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறிப்பிட்ட சிவில் சமூகப் பிரதிநிதிகள்,

கடந்த வருடம் அரசியல் கைதிகளின் விடுதலை கோரி பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அங்கஜன் இராமநாதன் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். சிறைச்சாலையில் கைதிகளையும் பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் சந்தித்துக் கலந்துரையாடியிரந்தார். அண்மையில் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் தனியான விவாதம் நடத்தவேண்டும் என டக்ளஸ் தேவானந்தா கோரியிருந்தார்.

அரசியல் கைதிகள் விடுதலை குறித்து இவர்கள் அறிக்கைகள் வெளியிடுகிறார்கள், ஊடகங்களிற்கு பேட்டிகள் கொடுக்கிறார்கள். தமிழ் மக்களின் வாக்குகளால் தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் என்று கூறுகின்ற பிரதியமைச்சர் அங்கஜன் இராமநாதன் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்த உள்ளிட்ட வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற தமிழ் நடாளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாவிட்டால் வரவு செலவுத்திட்டத்தை எதிர்த்து வாக்களிப்போம் எனும் நிபந்தனையை அரசிற்கு முன்வைக்கவேண்டும் என விரும்புகின்றோம். முன்வைப்பார்களா? என கோரினர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com