சற்று முன்
Home / செய்திகள் / அங்கஜன் இராமநாதனின் அழைப்பில் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அமைச்சர் மகிந்த சமரசிங்க விஜயம்

அங்கஜன் இராமநாதனின் அழைப்பில் தொழில்நுட்பக் கல்லூரிக்கு அமைச்சர் மகிந்த சமரசிங்க விஜயம்

அங்கஜன் இராமநாதன் அவர்களின் அழைப்பையேற்று இன்று மதியம் திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அதிகாரசபை அமைச்சர் கௌரவ மகிந்த சமரசிங்க ஆகியோர் கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரிக்கு விஜயம்  செய்தார்   தொழில்நுட்பக் கல்லூரி அமைவிடத்தினையும் ,கட்டடங்கள் மற்றும் வகுப்பறைகளையும் பார்வையிட்டதுடன்கல்வி பயிலும் மாணவர்களை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடி அவர்களுடைய குறை நிறைகள் கேட்டறியப்பட்டது .
அதன் போது மாணவர்களால் சுகாதாரவசதி  போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் எனவும் கற்றல் நடவடிக்கைகளுக்கான ஆய்வுகூட வசதி, கணனி, மற்றும் கற்றல் தளபாட வசதிகள் செய்து தர வேண்டும் என கேட்கப்பட்டது
அதன் போது அமைச்சர் மேற்பட்டி தொழில் நுட்பக்கல்லுரிக்கு 19மில்லியன் ரூபா அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் மேலும் 10 மில்லியன்ரூபா   ஒதுக்குவதாக மாணவர்களுக்கு உறுதியளித்தார்.
 
அத்துடன் அங்கஜன் இராமநாதன் அவர்கள்  வடமராட்சி  மற்றும் தென்மராட்சி மாணவர்களின் நலன் கருதி தொழில்நுட்பக் கல்லூரிக்கு சாவகச்சேரி  சரசாலையில்  உள்ள அரசுக்கு   சொந்தமான காணியில்   பிறிதொரு திறன் அபிவிருத்தி மையத்தையமைப்பது   சம்மந்தமாகவும் அமைச்சருடன்  கலந்துரையாடினார்  அதற்கு அதுசம்மந்தமாக  அமைச்சர்   உடனடியாக ஆய்வுசெய்து அறிக்கை சமர்பிக்கும் வண்ணம் தனது செயலாளரை பணித்துள்ளார் .
மேலும் அங்கஜன் இராமநாதன் அவர்கள் கூறுகையில் மாணவர்களின் கல்வி செயற்பாட்டில் இடையூறு செய்யும் எந்த நடவடிக்கைகளில் எவர் ஈடுபட்டாலும் அவர்கள் மீது பாரபட்சம் பார்க்காமல் நடவடிக்கை  எடுக்கப்படும்.என உறுதியளித்தார் .

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com