அக்னி நட்சத்திரம் தொடங்குவதால் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும்

அக்னி நட்சத்திரம் எனப்படும் கடும் கோடை காலம் நாளை தொடங்கி வரும் 28-ம் தேதி வரை நீடிப்பதால் இலங்கை மற்றும் தமிழகத்தில் தற்போது உள்ள வெப்பநிலையை விட 2- 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று சென்னையில் செய்தியாளர்கiளச் சந்தித்த அதன் இயக்குநர் பாலச்சந்திரன் அவர் கூறியதாவது:

”தற்போது உள்ள வெப்பநிலையை விட 2- 3 டிகிரி வெப்பம் அதிகரிக்கும். ஈரப்பதம் குறைந்து வறண்ட சூழ்நிலை நிலவுவதால் இந்த வெப்பநிலை அதிகரிக்கும். மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பநிலை அதிகரித்து காணப்படும்.  10 நாட்களுக்கு 2-6 டிகிரி வெப்பம் அதிகரிக்கும்” என்று பாலச்சந்திரன் தெரிவித்தார்.

இந்த ஆண்டு கோடை காலம் ஆரம்பித்ததில் இருந்தே வெப்பம் மிகக் கடுமையாக இருந்து வருகிறது.

சூரிய ஒளி கூர்மை அடைந்து வெப்பம் அதிகரிக்கும் அந்த குறிப்பிட்ட காலம் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு கத்தரி என்ற பெயரும் உண்டு. இச்சொல்லின் பொருள் வேனிற் காலத்துக் கடுங்கோடை என்பதாகும்.

முதல் 7 நாட்கள் வெப்பம் ஏறுமுகமாகவும், நடுவில் உள்ள 7 நாட்கள் வெப்பத் தாக்குதல் கடுமையாகவும், மூன்றாவது 7 நாட்கள் வெப்பம் இறங்குமுகமாகவும் இருக்கும். இதனை உணர்வுபூர்வமாகவே அறிய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com