அக்காவுக்கு ஏதும் நடந்தால் குண்டுவைத்து கொன்றிடுவோம் – கிளி. ஊடகவிலலாளருக்கு மிரட்டல்

அக்காவுக்கு ஏதேனும் நடந்தால் குண்டு வைக்கவும் தயங்க மாட்டேன் என கிளிநொச்சி ஊடகவியலாளாருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அத்தோடு இதுவரை 36 ஊடகவியலாளா்கள் காணாமல் போயுள்ளனா் என்றும் நீா் 37 ஆவது ஆளாக இருப்பாய் என்றும் இனந்தெரியாத அந்த நபா் தொலைபேசியில் எச்சரித்துள்ளாா்.

பிரபாகரன் இருந்திருந்தால் பிரதமராகியிருப்பாா் என இராஜாங்க அமைச்சா் விஜயகலா மகேஸ்வரன் கடந்த வாரம் தெரிவித்த கருத்து அனைத்து ஊடகங்களிலும் செய்தியாக வெளிவந்தது.
இந்த நிலையில் ஆங்கில பத்திரிகை ஒன்றில் கிளிநொச்சி ஊடகவியலாளரான எஸ்என். நிபோஜன் எனும் பெயரில் வெளிவந்த குறித்த செய்தியை அடிப்படையாக கொண்டு ஊடகவியலாளாருடன் தொலைபேசி மூலம் நேற்று வெள்ளிகிழமை 30-12-2016 முற்பகல் தொடா்பு கொண்ட இனம் தெரியாத நபா் ஒருவா் குறித்த செய்தியை ஊடகவியலாளா்கள் கருத்து திரிபுபட எழுதி விட்டாா்கள் என்றும் சில வேளை அமைச்சா் தடுமாறி தவறாக உச்சரித்தாலும் அதனை ஊடகவியலாளா்கள் திருத்தி சரியாக எழுத வேண்டும் ஆனால் அதை விடுத்து வேண்டும் என்றே அமைச்சருக்கு நெருக்கடி ஏற்படும் வகையில் செய்தி எழுதப்பட்டுள்ளது.
எனவே இந்தச் செய்தியினால் அக்காவுக்கு( அமைச்சருக்கு) ஏதேனும் நடந்தால் தான் கிளிப் சார்ச் ( குண்டு வைக்க) பண்ணக் கூட தயங்க மாட்டேன் எனக்கு எல்லா ஆயுதங்களும் பயன்படுத்த தெரியும் எனவும் கடும் தொனியில் அச்சுறுத்தல் விடுத்துள்ளாா். அத்தோடு தனக்கு அனைவருடனும் தொடா்புகள் இருக்கிறது என்றும் எல்லா இடங்களிலும் தனக்கு ஆட்கள் இருக்கின்றாா்கள் என்றும் மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடா்பில் ஊடகவியலாளா் எஸ்என் நிபோஜன் இன்று சனிக்கிழமை மதியம் கிளிநொச்சி பொலீஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை பதிவு செய்துள்ளாா்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com