அக்கரப்பத்தனையில் ஆர்ப்பாட்டம்..

அக்கரப்பத்தனை வேவர்லி தோட்ட தொழிலாளர்கள் 09.09.2016 அன்று தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் 60 பேர் ஈடுப்பட்டனர்.

தோட்ட நிர்வாகம் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய சலுகைகளை முறையாக வழங்குவதில்லையென தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்டதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தோட்ட நிர்வாகத்தால் தேயிலை மலைகளை முறையாக பராமரிக்காமல் கைவிடப்பட்டுள்ளதாகவும் இதனால் தொழில் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் மேலும்  தெரிவிக்கின்றனர்.

தோட்டத்தில் உள்ள தேயிலை மலைகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு இதில் தொழில் செய்யுமாறு தோட்ட நிர்வாகத்தால் தொழிலாளர்களுக்கு அறிவித்துள்ளது.

இதன் காரனமாக 18 கிலோ தேயிலை கொழுந்து பறிக்கமுடியாத நிலையில் இருப்பதாகவும் குறைந்த கிலோ கிராம் தேயிலை பறித்தால் அதற்கு சம்பளம் வழங்கமுடியாது என தோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளதாக இவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது தேயிலை செடிகளில் கொழுந்து குறைந்துள்ளமையால் தோட்ட நிர்வாகம் கேட்கும் கிலோ  கிராம் தேயிலை பறிக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக தொழிற்சங்க அதிகாரிகளிடம் முறைப்பாடுகள் செய்தபோதிலும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லையென ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட தொழிலாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

தமக்கு வழங்கவேண்டிய சலுகைகளை வழங்காவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்படபோவதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.20160909_094048 20160909_094100 20160909_095754

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com