அகதிகள் படகு விபத்துக்குள்ளானது : 700 பேரில் 340 பேர் மீட்பு – 117 சடலங்கள் கண்டெடுப்பு

Libya-borad-aci-03-06-16-seithyworldகிரீஸ் நாட்டுக்குள் குடியேறும் நோக்கத்தில் சுமார் 700 பேருடன் வந்துள்ள அகதிகள் படகு, எகிப்து நாட்டை ஒட்டியுள்ள கிரெட்டே என்ற கடற்பகுதி வழியாக வந்தபோது காற்றின் போக்குக்கு ஈடுகொடுக்க இயலாமல் கடலில் கவிழ்ந்து, மூழ்கியுள்ளது.

இது தொடர்பான தகவல் அறிந்ததும், இரண்டு கடலோர ரோந்து கப்பல்கள், 4 விமானகளை கிரீஸ் அரசு தேடுதல் பணியில் ஈடுபடுத்தியமைக்கு அமைய, இதுவரை 340 பேரை உயிருடன் மீட்டுள்ளனர்.

இந்நிலையில், லிபிய கடற்கரையில் சுமார் 117 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.

உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com